ஃபோலிக் அமிலம் — உன்னதமான ஊட்டம் செல் வளர்சிதைமாற்றம் இயல்பாக நடப்பதற்கு. பற்றாக்குறை ஏற்படும்போது வளர்சிதைமாற்றத்தில் இயல்பு திரிந்து குறைபாடுகள் ஏற்படும். கரு உருவாகும்போது துரிதமான வளர்சிதைமாற்றம் இருக்கும். அப்பொழுது பெண்களின் இரத்தத்தில் ஃபோலிக் அமிலம் சரியான அளவில் இருப்பது அவசியம்.குறைவாக இருக்கும்போது வளர்சிதைமாற்றத்தில் குறைபாடுகள் ஏற்பட்டு உருவாகும் உறுப்புக்களில் குறைபாடுகள் ஏற்படும்.கபாலம் சரியாக மூடாமல் மூளைவெளியில் தெரியும் நிலையில் இருத்தல்(open  neural tube defects- anencephaly ect)முதுகு எலும்பு திறந்த நிலையில் தண்டுவடம் வெளியில் தெரியும் நிலையில் இருத்தல்( spina bifida), உதட்டில் பிளவு மற்றும் மேல்தாடையில் பிளவு  (cleft lip and palate)கருக்கலைதல் ( miscarriage)மேற்கூறிய அனைத்திற்கும் முதற்காரணி ஃபோலிக் அமிலம் சரிவிகிதத்தில் இல்லாதது ஆகும்.இயல்பாக நாம் உண்ணும் உணவில் போதுமான அளவில் இருப்பது இல்லை.மாத்திரைகளாக உட்கொள்வது அவசியமாகிறது.ஒரு கட்டு பச்சைக்கீரையை சமைக்காமல் உண்டால் போதுமான அளவு ஃபோலிக் அமிலம் கிடைக்கும்.அதற்கான வாய்ப்பரிது.சர்க்கரை,வலிப்பு நோய்,முந்தைய மகப்பேரில் உறுப்பு குறைபாடோடு குழந்தை பிறந்தவர்கள்மற்றும் கருக்கலைந்தவர்கள், குறைமாதத்தில் குழந்தை பெற்றவர்கள் மற்றும் குழந்தையின்மைக்கு சிகிச்சை பெறுபவர்கள் கருமுட்டை வளர கருவிதைப்பையை ஊக்கப்படுத்த மருந்து எடுப்பவர்கள் அனைவரும் ஃபோலிக் அமில மாத்திரைகள் 500mcg  உட்கொள்வது அவசியம்.கர்ப்பமாக திட்டமிட்டவுடன் உட்கொள்ள ஆரம்பிக்க  வேண்டும் குறைந்தபட்சமாக. முதல் மூன்று  மாதகர்ப்பகாலம் வரை தொடர வேண்டும்.இவ்வாறு எடுத்துக்கொள்வதன் மூலம் ஃபோலிக் அமில குறைபாட்டினால் உருவாகும் உறுப்பு குறைபாடுகளை முற்றிலும் தடுக்கமுடியம். அதனால் குழந்தைக்கு மற்றும் பெற்றோருக்கு  ஏற்படும் சங்கடங்கள் தவிர்க்கலாம்.மருத்துவர்.இந்திரா நெடுமாறன்12.01.2019